“பை பை மோடி” ஐதராபாத்தில் பேனர்

ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டதிற்கு நாளை வருகை புரியும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து “பை பை மோடி ” விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது அதிரிச்சிய ஏற்படுத்தியது.

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் நாளை முதல் மறுநாள் வரை இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால், அங்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலத்த ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், ”பை பை மோடி” என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை சுற்றியும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பலகைகளை அதிகாரிகள் அகற்றினர். பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது, ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.