கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சேம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பத்தாவது தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் ஊட்டி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதியை சேர்ந்த சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை முதல் பல சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியை சட்டமன்ற உறுப்பினர், திரு அம்மன் கே அர்ஜுனன் அவர்கள் தொடங்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்கள், சுமார் 100 பேர் நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகினர். இந்த போட்டி குறித்து இதன் தலைவர் தியாகு கூறும்போது. கடந்த பத்து வருடங்களாக பல விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளதாகவும், இந்த வருடம் தேர்வாகியுள்ள 100 பேரும் நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதன் மூலம் கராத்தே போட்டியில் தமிழக மண்ணிலிருந்து பல வெற்றியாளர்களை உருவாக்குவதே  தமது நோக்கம் என்று கூறினார்.