சபாஷ்…டூ வீலருக்கும் சேர்த்து கான்கிரீட்

வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக போடப்பட்ட சாலைப்பணியால், தன் கடமை உணர்ச்சிக்கு அளவில்லாமல், சாலையோர நின்ற இருசக்கர வாகனத்துக்கும் சேர்த்து கான்கிரீட் போட்டதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வேலூரில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை மீட்டனர்.

இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமலும் முன்னறிவிப்பு இன்றியும் சாலை போட்டுள்ளதாகவும், இது போன்று தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என, எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள். கடமைக்கு என்று வேலை பார்க்காமல், மக்களின் நலனுக்காக வேலை பார்க்கவேண்டும் என, பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.