இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு – முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பத்தூரில் ரூ. 109.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனப் பேசிய அவர், பெரும்பாலான மாநில அரசுகளுக்கு சமூக நீதி பேசும் வழிகாட்டியாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

அனைத்து மாவட்டங்களையும் வளர்த்தெடுப்பதை முக்கியமானதாக கருதுகிறேன். தனி மனிதன் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகிறோம். ஒவ்வொரு குடும்பமும் வளம் பெற குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்காக தான் ‘நான் முதல்வன்’ திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.

தன் சக்தியை மீறி உழைத்து வருவதாக கூறியதோடு, தான் மட்டும் இல்லை அமைச்சர்களும், அதிகாரிகளும் அப்படித்தான் உழைத்து வருகின்றனர் எனப் பேசினார்.