எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் சார்பாக கல்வி உதவித்தொகை

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் சார்பாக, சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனர் கல்வி உதவித் தொகை மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் நிறுவனர் சுப்பிரமணியன் தலைமை உரை ஆற்றினார். மற்றும், எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தாளாளர் ராஜலட்சுமி குற்றுவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமங்களில் உள்ள ஒன்பது கல்லூரிகள் மற்றும் எஸ்.என்.எஸ்.அகாடெமியில் பயிலும் மாணவ மாணவியர், நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் குழந்தைகள், முன்னாள் மாணாக்கர்களின் உடன் பிறந்தோர் மற்றும் கொரோனவினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதனால் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன் பெற்றனர். மேலும் கடந்த ஆண்டில் எஸ்.என்.எஸ். நலத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 20 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.