ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

இந்தியா முழுவதும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்யவேண்டிய அவசர நிலையில் உலக நாடுகள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், குறைந்த அளவிலான பயன்பாடு மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படும் என மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.