பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் உபகரணம் – அன்பில் மகேஷ்

  தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மதுரை அடுத்த புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை நேற்று கோலாகலமாக அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது,  ‘தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரும்  2025ம் ஆண்டில் கல்விதரத்தில் தமிழ்நாடு இந்திய அளவில் முன்னணி இடத்தைப்பிடிக்கும். எண்ணும் எழுத்தும் திட்டமானது, மழலையர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அறிமுகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்குவது மட்டுமின்றி 10 உபகரணங்களும் வழங்குவதாக கூறினார். அதோடு இவற்றிற்கு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசுப் பள்ளி கட்டங்கள் சேதமடைந்து இருந்தால், மாணவர்களை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளர். தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.