எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுசரிக்கப்படுகிறது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்திலே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்நிலையில், ரத்ததானத்தின் நன்மையை வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.