இன்றிரவு வானில் தோன்றும் ‘ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்’

ஸ்ட்ராபெரி மூன் என்று சொன்னவுடன் வானில் தோன்றும் நிலா ஸ்ட்ராபெரி உருவத்திலோ அல்லது அந்த நிறத்திலோ இருக்கும் என நினைத்துக் கொள்ளாதீர்கள். அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடைக் காத்தின் போது, வரும் முழு நிலவிற்கு ஸ்ட்ராபெரி நிலவு என பெயர் வந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் ஸ்ட்ராபெரி என வர்ணிக்கப்படும் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவு வானில் தெரியவுள்ளது. இந்த நிகழ்வின்போது வானத்தில் உள்ள முழு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும்போது இந்த அரிய நிகழ்வு நடப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தியாவில் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெரியாது என்றும், எனினும் பொதுமக்கள் இதனை இணையத்தின் வாயிலாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவு குறைவாக இருக்கும்போது நிலவின் அளவு புவியில் இருந்து சற்று பெரிதாக தோன்றும். இச்சமயத்தில் ஏற்படும் பௌர்ணமி நிலவு வழக்கத்தைவிட மிகப் பெரிதாக இருக்கும். இதுவே “சூப்பர் மூன்”. தற்போதும் இதே நிகழ்வு தான் நிகழவுள்ளது.

வானம் தெளிவாக இருந்தால் இந்த காட்சி கண்ணைக் கவர்ந்து விடும். இன்றைய ஸ்ட்ராபெரி நிலவு வழக்கமான முழு நிலவை விட 10 சதவீதம் பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.