விஸ்தாரா விமான சேவை: டெல்லி, கோவை இடையே துவக்கம்

டெல்லி மற்றும் கோவை இடையே தினசரி நேரடி விமான சேவையை விஸ்தாரா நிறுவனம் துவங்கியுள்ளது.

மும்பை-கோவை வழித்தடத்தில் தினசரி நேரடி சேவையை வரும் மே 27 முதலும், ஜூன் 3 முதல் பெங்களூரு-கோவை வழித்தடத்தில் தினசரி விமான சேவையையும் துவங்கயுள்ளது.

இதுகுறித்து விஸ்தாராவின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன்,தெரிவித்ததாவது: மூன்று மெட்ரோ நகரங்களில் இருந்து கோவைக்கு தினசரி நேரடி விமானங்களை பயணிகள் வசதிக்கேற்ப புறப்பாடு மற்றும் வருகை நேரத்தில்தொடங்குவது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக இணைப்புகளை வழங்குவதற்கும், எங்கள் உள்நாட்டு விமான சேவையை வலுவாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

கோவை சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல் வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதால், பயணிகள் அதிகளவில் பல நோக்கத்திற்காக பயணிக்கும் நகரமாக உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களில் சிறந்த சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது என்றார்.