நேரு கல்வி குழுமம் சார்பில் ‘ரித்தி 2022’ விழா

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு ‘ரித்தி 2022’ பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

நேரு கார்போரேட் பிளேஸ்மெண்ட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் ரிலேஷன்ஸ், தலைவர், ரமேஷ் ராஜா வரவேற்றார். இக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ண குமார் தலைமை வகித்து பேசியதாவது: இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இப்போது நடக்கும் நிகழ்ச்சியில், மாணவர்களோடு பெற்றோரும் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் கடின உழைப்பாலும், முயற்சியாலும், நேரு கல்விக் குழும ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும் இது சாத்தியப்பட்டுள்ளது.

160 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 1800 க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை மாணவ மாணவியர்களுக்கு வாழங்கியது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார்.

சிறப்பு விருந்தினராக சென்னை, டெல்ஃபி டி. வி. எஸ். டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துணை பொது மேலாளர் நாகராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அணிருதன், நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி முதல்வர் மணியரசன், நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் சிவராஜ், நேரு காலேஜ் ஆஃப் மேனேஜ்மென்ட் முதல்வர் மோசஸ் டேனியல், நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், முதல்வர் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.