ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் 27 பேராசிரியர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் 27 பேராசிரியர்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களிடம் முனைவர் பட்டம் பெற்றனர்.

இதன்படி எலெக்ட்ரானிக்ஸ் துறையில் 3, எம்.பி.ஏ. துறையில் 3, ஆங்கிலத் துறையில் 3, பி.காம் துறையில் 3, தமிழ்த்துறையில் 2, பி.காம், பி.ஏ. துறையில் 2, கணினி அறிவியல் துறையில் 2, பி.சி.ஏ. துறையில் 2, பன்னாட்டு வணிகம், பி.காம். சி.எஸ்., பி.காம். பி.பி.எஸ்., கணிதம், பி.காம். ஐ.டி., பி.எஸ்சி. ஐ.டி., நூலகம் ஆகிய துறைகளில் தலா 1 என மொத்தம் 27 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.

முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்தனர்.