கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா 

கோவை கே.ஜி. மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா வியாழக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் செவிலியர் தலைமை நிர்வாக அதிகாரி டெல்பின் சின்ன ராணி வரவேற்புரை வழங்கினார். மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து அனைத்து செவிலியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.