எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 14 வது ஆண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் குரூப் அப் கம்பெனியின் இயக்குநர் சந்திரசேகர் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக பெங்களூர் எச்.பி-ன் சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜர் ஜோதி சேகரன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வில் எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடியூஷனின் தலைவர் சுப்பிரமணியன், டெக்கினிக்கல் டைரக்டர் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ் டெக்கினிக்கல் இன்ஸ்டிடியூஷனின் இயக்குனர் அருணாச்சலம், பொறியியல் கல்லூரி முதல்வர் சார்லஸ், துணை முதல்வர் சுதாகரன் மற்றும் துறை தலைவர்கள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறந்த மாணவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.