நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் மேலாண்மை இயக்ககத்தின் கீழ் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இந்த துவக்க விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கிருட்டிணமூர்த்தி, பயிர் மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் (பொறுப்பு) சின்னமுத்து, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமையேற்றனர்.

மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழக அதிகாரிகள் துறைத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.