தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உழவியல் மாநாடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் வேளாண் மாநாடு – 2022 நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், மேகாலயா மாநிலம் வேளாண்மை கல்லூரி முதல்வர் யுகே.பெஹ்ரா, ஓய்வுபெற்ற மற்றும் மாநிலத்தின் மூத்த உழவியல் துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகந்நாதன், எதிர்கால விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வலியுறுத்தினார்,

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கதிரேசன் பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளின் அறிவியல் பின்னணியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தியதுடன், அறிவியல் மற்றும் விவசாய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மற்ற துறைகளுடன் விவசாய ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்க வலியுறுத்தினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, வேளாண் தொழில்நுட்பத் தலையீடுகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்களித்த ஓய்வுபெற்ற அனைத்து உழவியல் விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

மாறிவரும் கால நிலையின் கீழ் பயிர்களின் உற்பத்தித்திறனை நிலையான முறையில் அதிகரிக்க வேளாண் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஓய்வு பெற்ற உழவியல் விஞ்ஞானிகள். பேராசிரியர்கள் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் ஆகியோருடன் ஒரு கருத்துயிர் அமர்வு நடத்தப்பட்டு எதிர்காலத்திற்கான ஒரு இணக்கமான தீர்வைப் பெறுவதற்கு வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உள்ள தடைகளை நீக்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.