கோவையில் “கைவினைஞரின் ஆடி திருவிழா”

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார்  மற்றும் தமிழ்நாடு  கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக்கழகம் இணைந்து , “கைவினைஞர்களின் ஆடி திருவிழா கண்காட்சி  மற்றும் விற்பனை ”  17.07.2018  முதல் 31.07.2018  வரை நடத்த உள்ளது. இக்கண்காட்சி,  தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில்   கலம்காரி துணிவகைகள், மகளிர் காட்டன் துணிவகைகள், மர பொம்மைகள், மரத்தினாலான மசாஜ் உபகரணங்கள், காகித கூழ் பொம்மைகள், களி மண் பொம்மைகள், தேங்காய் நார் பொருட்கள் மற்றும் தோட்ட உபகரணங்கள், வாசனை மெழுகுவர்த்திகள்,பித்தளை சிலைகள், பளிங்குத்தூளில் செய்யப்பட்ட சிலைகள், பித்தளை பொருட்கள் மற்றும் எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.    

இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து  கைவினைப்பொருட்களுக்கும்  10 % வரை சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமு மின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சியில் விற்பனைக்கு உள்ள கைவினைப்பொருட்களை கோவை மாநகர மக்கள் வாங்கி பயன் பெறுவதுடன் இக்கலைப்பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.