பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை

டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இருவரும் சந்தித்து நான்கு மணி நேரத்திற்கும் மேல் பேசிய நிலையில், இன்று மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது தனது தேர்தல் வியூக திட்டங்களை சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இது தொண்டர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இரு நாட்களுக்கு முன்பு சந்தித்த நிலையில், டெல்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.