மே 1 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மே 9-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 31-ம் தேதி கடைசி நாள். இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பத்தை, சமர்ப்பிக்க ஜூன் 3-ம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.

ஜூன் 20-ம்தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் ஜூன் 22-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.