மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பணிபுரியும் மகளிர்களுக்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.