இந்துஸ்தான் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கு

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ஜெயா தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு கேரியர் கைடன்ஸ் அமைப்பின் நிறுவனர் ஜெயபிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பொறியியல் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை பயிலும் 15 க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் எவ்வாறு அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப துறை வேலைகளுக்கு தங்களை தயார் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணைச்செயலாளர் பிரியா சதீஸ் பிரபு, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.