உலகின் முதல் குபேரர் கோவிலில் 700 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா குபேர யாகம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சாலவரா என்ற இடத்தில் அமைந்துள்ள உலகின் முதல் குபேரர் கோவிலில் மிகப் பெரிய மஹா குபேர யாகம் வருகிற ஏப்ரல் 17 முதல் 23 ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்த இடம் ஷொர்னூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொச்சி, கோழிக்கோடு, கோவை சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் யாகம் நடைபெறும் கோவிலுக்கு வரலாம். இந்த மஹா குபேர யாகத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகுபேர அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த ஏழு நாள் யாகம் குபேரபுரி என்ற இடத்தில் உள்ள யாக பூமியில் நடத்தப்படுகிறது.

இக்கோவிலின் நிர்வாக அறங்காவலர் ஜித்தின் ஜெயகிருஷ்ணன் முன்னிலையில் பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரும் நடிகருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மஹா யாகம் தொடர்பான தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட விளம்பர வீடியோ மற்றும் சிறிய கையேட்டை வெளியிட்டனர்.

700 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் யாகம் என்பதால் மகா குபேர யாகத்தின் அனைத்து சடங்குகளின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளன. முதல் யாகமானது குபேரரால் நடத்தப்பட்டது. குபேரன் தான் கட்டமைத்த இலங்கைத் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சரஸ்வதி நதிக் கரையில் இந்த முதல் யாகத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து சிவபெருமான் அவருக்கு அழகாபுரி என்ற நகரத்தை அளித்து, யக்‌ஷராஜாவாக அவர் முடிசூட்டப்பட்டார் என பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாகம் குறித்து ஸ்ரீகுபேரர் கோவிலின் நிர்வாக அறங்காவலர் ஜித்தின் ஜெயகிருஷ்ணா கூறுகையில், “கோவிட் 19 அனைவரையும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கிவிட்டது. இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய மஹா குபேர யாகத்தை நடத்தும் பாக்கியத்தைப் பெற்றமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறோம். யாகத்தின் மூலம் கிடைக்கும் பொருளாதார அமைதி மற்றும் செழுமையைப் பெற யாக பூமியில் இருந்து வெளிப்படும் தெய்வீக அருளின் அனுபவத்தைப் பெற உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை அழைக்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த யாகத்தின் மையக் கருத்து ‘விட்ட காமோ யஜேதா (Vitta Kaamo Yajetaa)’ என்பதாகும். அதாவது, ஒரு தனிப்பட்ட நபரை சமூக மற்றும் பொருளாதாரத்தில் உயர்த்துவதாக இல்லாமல் அவரது குடும்பம், அவரது கிராமம் அல்லது நாடு என ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.

யாக பூமிக்கு நேரடியாக வர முடியாத ஆனால் யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக யாகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த தகவலுக்கு: http://www.kuberatemple.in

Source: Press Release