ஐ.ஏ.எஸ் எனும் கனவை நனவாக்குவோம்

நூறாண்டுகளாக இந்தியாவின் பெருமைமிகு குடிமைப்பணி  தேர்வுகளில் ஒன்றாக இந்திய ஆட்சிப்பணி சார்ந்த தேர்வுகள் விளங்குகின்றன. இந்தியாவின் உயர் பதவியில் இருப்பவர்கள் தொடங்கி, பாமரன் வரை அறிந்த சொல் ‘கலெக்டர்’.

இந்த குடிமைத்தேர்வு எனும் தேர்வுகளில் கலெக்டர் மட்டுமல்ல, காவல்துறை, வனத்துறை, அயல்நாட்டுத் துறை என்று இருபதுக்கும் மேற்பட்ட படிப்புகள் உண்டு. இன்றும் பலருக்கு இந்த தேர்வுகள் ஒரு கனவாகவே உள்ளது.

ஒரு காலத்தில் ஆட்சிப்பணி சார்ந்த பதவிகளில் தமிழகத்தைச் சேர்ந்த நிறையப்பேர் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  அந்த நிலை இல்லை. அதுவும் பொறியியல் கல்வி சார்ந்ததுறைகள்  சூடு பிடிக்கத் தொடங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணி வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்றவைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர்.

ஆனால் இன்று மறுபடியும் வாழ்க்கைச் சக்கரம் மாறி சுழலத்தொடங்கி விட்டது. பொறியியல் படிப்புகளுக்கான பணி வாய்ப்புகள் மறைந்து, கலை, அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கான வாய்ப்புகளள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐஏஎஸ் படிப்புகள் மறுபடியும் பிரபலமாகி வருகின்றன. ஒரு வகையில் மக்களை நேரடியாகச் சென்றடையக்கூடியதாகவும், பல சமூக திட்டங்களை நிறைவேற்றும் பணி வாய்ப்புகளும்  சேவைகளும்  நிறைந்ததாக இந்த துறை உள்ளது.

ஆனால் இதற்கென்று ஒரு தனிப்பாடத்திட்டம் இல்லை. அவரவர் துறை சார்ந்த படிப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. பிறகு நேர்முகத் தேர்வு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்றும் ஒரு  பயிற்சி, அதையடுத்து பணி வாய¢ப¢பு என்று நடைமுறை அமைந்துள்ளது.

இந்தத் தேர்வை எழுதுவதற்கு வழிகாட்டும் மையங்கள் நிறைய உண்டு. பெரும்பாலும் டில்லி, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில்தான் இந்த மையங்கள் அதிகம் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட நகரங்களில் உள்ள மையங்களால் ஒரு கிராமத்து மாணவருக்கு பெரிய அளவில் உதவி புரியும் வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் இது போன்ற மையங்கள் ஆங்காங்கே நாட்டின் பிற நகரங்களிலும் பெருக வேண்டும் என சில ஐஏஎஸ் வழிகாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் சேவை பாராட்டத்தக்கது. அந்த வகையில் கோவையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமியின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.

‘தான் அடைய முடியாததை தனது அடுத்த தலைமுறை அடைய வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் பாடுபடுவது’ இந்தியர்களின் சிறப்பு குணம். தனக்கு நிறைவேறாத ஐஏஎஸ் கனவை அடுத்த தலைமுறை மாணவர்கள் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், கே.பி.ஆர். நிறுவனத்தின் மூலம் இந்த கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமியை நடத்தி வருகின்றார் இதன் நிர்வாக இயக்குநர் கே.பி.டி. சிகாமணி அவர்கள்.

ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது பலருக்கு கல்விதந்து அதன்மூலம் மகிழ்ச்சியைத் தேடுபவராகவும், வாழ்வில் உயர உழைப்பு மட்டுமே உறுதுணை என்ற நம்பிக்கை கொண்டும், பல மாணவர்களின் வாழ்வில் ஒளியூட்டி, நாட்டிற்கான பல சேவையாளர்களை உருவாக்க  இன்னும் பல இலக்குகளை நோக்கி செயல்பட்டு வருகிறார் கே.பி.டி. சிகாமணி அவர்கள்.

அவர் நமது ‘தி கோவை மெயில்’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில்?

‘‘நாங்கள் எள¤ய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். என் சகோதரர் கே.பி. ராமசாமி தான் நானும், என் தம்பி பி. நடராஜும் கல்வி கற்க காரணமாகத் திகழ்ந்தவர். 1984ல் நானும் எனது சகோதரர்களும் இணைந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினோம். இதன் வளர்ச்சியாக கே.பி.ஆர். மில் நிறுவனத்தை  ஆரம்பித்தோம் அது தற்சமயம் நம் நாட்டிலேயே சிறந்த டெக்ஸ்டைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

2009-ம் ஆண்டில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியினைத் தொடங்கினோம். இக்கல்லூரி சுமார் 2000க்கும் மேற்ப்பட்ட பொறியாளர்களை உருவாக்கி நாட்டிற்கு அற்ப்பணித்து கொங்கு மண்டலத்தின் மிக சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

சகோதரர் பற்றி சில வார்த்தைகள்?

என் பள்ளிப் பருவத்தின் முதலே என் தம்பியை ஐ.ஏ.எஸ். ஆக்குவதற்காக படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறேன் என்று என் அண்ணன் கே.பி. ராமசாமி அனைவரிடமும் கூறிவருவார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப நான் 1977ல் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினேன்.

ஆனால் என்னால் தேர்ச்சி பெற இயலவில்லை. மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அத்தோல்வியின் தாக்கம் எனக்குள் இருந்தது.

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எத்தனையோ மாணவர்கள் இருப்பார்களே, ஏன் அவர்களுக்கு நல்ல பயிற்சி அளித்து பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்கக் கூடாது என்று என் சகோதரர் என்னிடம் கூறினார். நிச்சயமாக நான் முயற்சி செய்கிறேன் எனக் கூறி, அந்த குறிக்கோளோடுதான் கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாதெமியை ஆரம்பித்தோம்.

எனது சகோதர்களின் ஒத்துழைப்பும் உறுதுணையும் தான் நான் கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ் அகாதெமியை இந்த அளவிற்கு கொண்டு வர முடிந்தது என மகிழ்வுடன் கூறுவேன்.

இந்த நிறுவனம் தொடக்கம் எவ்வாறு அமைந்தது?

2011-ல் அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் அகாதெமியை முதன்முதலில் ஆரம்பித்தோம். எங்களது மில்லில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றும் மேற்கு மண்டலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும் என எங்கள் நிறுவனத் தலைவர் கே.பி.ஆர் அவர்கள் விரும்பினார். எனவே அவர்களுக்கு எங்கள் அகாதெமியில் இலவச பயிற்சி அளித்தோம். ஆரம்ப கட்டத்தில் குறைவான மாணவர்களே பயிற்சிபெற்றாலும், நாளடைவில் அதிகம் பேர் பங்கேற்றனர். கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாதªமியிலிருந்து ஐஸ்வர்யா என்ற பெண்மணி மட்டுமே, முதன்முறையாக முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது எங்களுக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து திருப்பூரிலும் கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாதெமியை தொடங்கினோம். மேலும், அங்கு வரும் மாணவர்களுக்கு இலவச விடுதி, இலவச உணவு போன்ற ஏற்பாடுகளை அமைத்துத் தந்தோம். அதன்பின், கோவை காந்தி பார்க் அருகில் உள்ள ஏ.கே.எஸ். நகரில் கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாதெமியை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

நிறுவனத்தினை ஆரம்பிக்க உங்களின் நோக்கம்?

இதுவரை 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எங்களது அகாதெமியிலிருந்து உருவாக்கி உள்ளோம். மேலும் ஆண்டுதோறும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களை வெற்றி பெற செய்து, அவர்கள் இந்திய தேசத்திற்கு சிறந்த பணியாற்ற ஓர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவோம். இந்த மிகப்பெரிய பொறுப்பினை ஏற்று தேசத்திற்காக பல திறமைமிக்க அதிகாரிகளை உருவாக்கி சமுதாய முன்னேற்றத்திற்கு பாகுபாட வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளோடு பணியாற்றி வருகிறோம்.

நிறுவனத்தின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து உங்களின் வெற்றி?

ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். கடந்த ஆண்டில் அதிகபட்சமாக 7 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சியடைந்து நேர்க்காணலில் பங்கேற்றனர். அதில் 6 பேர் அகில இந்திய அளவில் வெற்றிபெற்று எங்களது நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்ற கணேஷ் IFS மற்றும் லலிதாம்பிகை IAS ஆகியோர் மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அகில இந்திய அளவில் ஒரே ஆண்டில் ஒரு அகாதெமியில் 6 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது ஒரு சிறந்த சாதனையாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

ஓர் நிறுவனத்தின் வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

கடின உழைப்பு, கூட்டு முயற்சி, மற்றும் பணியாளர்களின் மனநிறைவு தான்ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். கே.பி.ஆர் பணியாளர்கள் கே.பி.ஆர் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர்.

கே.பி.ஆர் இல் பணிபுரிபவர்கள் விரும்பினால், வேலை நேரத்திற்குப் பிறகு கல்வி கற்க ஏதுவாக  மிக சிறந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருப்பதுடன், திறமை மிக்க ஆசிரியர்களையும் நியமித்துள்ளோம். தொழிலாளர்களும் நிறுவனமும் எந்த சூழலிலும் இணைந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்களின் நலனே நிர்வாகத்தின் நலனாக கருதுகிறோம். எங்கள் தலைவரின் எண்ணப்படியே பணியாளர்கள் ஒவ்வொருவரின் நலனின் மீதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம்.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உங்களின் பங்கு?

இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே லட்சியம். அதற்காகவே பல அனுபவம் மிகுந்த பயிற்சியாளர்களையும், அதிகாரிகளையும் வரவழைத்து வகுப்புகள் நடத்துகிறோம். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி அறைகள் மற்றும் சிறந்த நூலகத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். நூலகத்தில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள தேவையான கணினி மற்றும் இன்டர்நெட் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் உங்களின் முன்னேற்றம் குறித்து?

சென்ற ஆண்டு சிறந்த பயிற்சியின் மூலம் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதால், வரும் ஆண்டில் கூடுதலாக மாணவர்கள் எங்களது கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சேர்வார்கள் என நம்புகிறோம்.

ஆகவே, வரும் கல்வி ஆண்டில் கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி சதவீதம் பெற முயற்சி செய்வோம். அதற்காக மேலும் பல அனுபவம் மிகுந்த மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

உங்களின் லட்சியமாக நீங்கள் எதைக¢ கருதுகிறீர்கள்?

நிறுவனம் மேலும் வளர்ச்சியடைந்து மிகச்சிறந்த சமூகப்பணியாற்ற வேண்டும். வசதி உடையோர், வசதியற்றோர் என அனைவருக்கும் கல்வி அள¤க¢க வேண்டும் என்பதே என் நோக்கம். காரணம், கல்வியைப் பொறுத்தவரையில் அனைவரும் சமம் என்று கருதுகிறேன்.

குறிப்பாக நம்மால் இயன்றதை இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்பதையே சிறந்த லட்சியமாக கருதுகிறேன். திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் அவர்கள் நாட்டிற்கு அதிகமாக சேவை செய்வார்கள். உழைப்பே ஒரு மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கும்.

உழைப்பு; உழைப்பின் மூலம் உயர்வு என்ற எண்ணம் கொண¢டு வாழ வேண்டும். அதுவே எந்த ஒரு மனிதருக்கும் லட்சியமாகவும் திகழ வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு உங்களின் சில அறிவுரைகள்?

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக இளம் தலைமுறையினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து  உழைப்பினைக் கொடுத்தால், மிக விரைவில் நம் நாடு சிறந்த  வளர்ச்சி அடைந்து, வல்லரசாக விளங்கும்.

நம் நாட்டில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல், வளமும் அதிகம் உள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் இந்த இளைஞர்களின் கையில் தான் உள்ளது. எனவே இளைஞர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற வேண்டும். இவர்கள் வளர்ச்சி அடைந்து நம் தேசத்தை உலக அளவில் மிகச்சிறந்த வல்லரசு நாடாக உருவாக்குவார்கள் என நம்புகிறேன்.

படங்கள்: பாலாஜி ரெமி.