இந்துஸ்தான் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கத்திற்காக மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்லூரியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மியாவாக்கி காடுகள் உருவாக்கத்திற்காக மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கோவை வனக்கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு (IFS), கோவை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ரவீந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.