“ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும்”

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. அதிலும் ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-

‘உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி – அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்’

உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.