முழுமையான பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்திடவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி, கிணத்துக்கடவு தமோதரன், கவுண்டம்பாளையம் அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ஜூனன், சிங்காநல்லூர் ஜெயராம், சூலூர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

பின்னர் பந்தயசாலையில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரி நாகராஜன் -யிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில், கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்திராத பிரச்சினை கலவரம் கரூர், சென்னை குண்டர்கள் வைத்து நிகழ்ந்து இருக்கின்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தினம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். தேர்தலில் கலவரத்தை உண்டு பண்ணி பணம், பொருட்கள் கொடுத்ததை கண்டித்து போராட்டம் நடத்தினோம். 9 பேர் மீதும் வழக்கு போட்டார்கள். மேலும் ஒவ்வொரு வார்டிலும் கரூர், சென்னை ரவுடிகள் இருந்து பண விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு வைத்தார். இது தொடர்பாக ஆட்சியர், சிறப்பு தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்தோம் என்றார்.

மேலும் அதிகாரிகளை மிரட்டி திமுக தோற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கபடுகின்றனர் என தகவல்கள் வந்துள்ளதாகவும் முதல்வர் அலுவலகத்தில இருந்தே பேசுகின்றனர் எனவும் மோசமான ஜனநாயக படுகொலை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை எனவும் இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மனு அளிக்கபட்டது. வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம். முறையாக நடக்கவில்லை என்றால் தடுத்து நிறுத்துவோம். கோவையில் முழுமையான பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.