ஜனநாயக கடமையாற்றிய அதிமுக வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயேன் 

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் அதிமுக வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயேன் அவரது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயேன்.

இவர், கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.