தமிழக முதல்வரின் திட்டங்களை தங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்க கவனம் செலுத்துவேன்

-தி.மு.க.வேட்பாளர் மாரிச்செல்வன்

தமிழக முதல்வரின் திட்டங்களை தங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்க கூடுதல் கவனம் செலுத்துவேன் என கோவை மாநகராட்சி 80 வது வார்டில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் மாரிச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், 80 வது வார்டு பகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிடும் மாரிச்செல்வன், கெம்பட்டி காலனி, அசோக் நகர், செட்டிவீதி போன்ற பகுதிகளில் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை பிரச்னைகளை கவனம் செலுத்துவேன் எனவும், குறிப்பாக தமிழக முதல்வரின் முத்தான திட்டங்களை தங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.