கோவை அதிமுக வேட்பாளர் கிருபாலினிக்கு மாணவர் அணி சார்பில் வாழ்த்து தெரிவித்த கார்த்திக்

கோவை மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயனுக்கு அதிமுக கோவை மாவட்ட மாணவர் அணி சார்பில் கார்த்திக் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 7 வது வார்டு பகுதியில் அ.தி.மு.க சார்பாக கிருபாலிணி கார்த்திகேயன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின் பேரிலும், எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜெயராம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரிலும் கிருபாலினி தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட அதிமுக  மாணவர் அணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் கிருபாலினிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட மாணவர் அணி சார்பாக கார்த்திக் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள கிருபாலினி இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதில், கோவை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாலர் செந்தில் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.