ரெனோ 7 சீரிஸை அறிமுகப்படுத்தும் ஓப்போ!

ஸ்மார்ட் போன் பிராண்டுகளில் முன்னணியில் இயங்கிவரும் ஓப்போ நிறுவனமானது ஓப்போ ரெனோ 7 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. “போர்ட்ரெய்ட் எக்ஸ்பர்ட்” ஆன ரெனோ 7 ப்ரோ 5ஜி ஆனது ஆன்லைன் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் ரூ. 39,999 விலையில் கிடைக்கும். அதுபோல, ஆல்-ரவுண்டர் ரெனோ7 5ஜி ஆனது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.28,999 எனும் அறிமுக விலையில் கிடைக்கும்.

ஓப்போ ரெனோ 7ப்ரோ இன் 32 எம்பி செல்ஃபி கேமராவானது ஐமேக்ஸ் 709, ஆர்ஜிபிடபிள்யு (சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் வெள்ளை) சென்சார் கொண்டுள்ளது. ரெனோ6 ப்ரோவில் காணப்படும் பாரம்பரிய ஆர்ஜிஜிபி (சிவப்பு, பச்சை, பச்சை மற்றும் நீலம்) சென்சாருடன் ஒப்பிடும் போது இது ஒளிக்கு 60 சதம் அதிக உணர்திறன் மற்றும் சத்தத்தை 30 சதம் குறைக்கிறது. இதன் பின்புற கேமரா அமைப்பில் முதன்மை தர 50 எம்பி சோனி ஐமேக்ஸ்766 சென்சார் உள்ளது.

பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் வீடியோ, டிஎஸ்எல்ஆர் கேமராவைப் போலவே பின்னணியில் பொக்கே லைட் ஸ்பாட்களுடன் போர்ட்ரெய்ட் வீடியோக்களை எடுக்கலாம்.

ரெனோ7 சீரிஸ் பற்றி ஓப்போ இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியாந்த் சிங் கானோரியா பேசும்போது, “தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டின் மையத்தில் உள்ளன. போர்ட்ரெய்ட் வீடியோகிராபி மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் எங்களின் கண்டுபிடிப்புகளுடன் புதிய வரையறைகளை வாடிககையாளர்களுக்கு தர நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.

ரெனோ 7 5ஜி ஆனது மீடியாடெக் டிமென்ஸ்டி 900 5ஜி எஸ்ஒசி ஆல் இயக்கப்படுகிறது, ஆனால் மீடியாடெக் டிமென்ஸ்டி 1200 மேக்ஸ் போன்றது தான்.

ரெனோ 7 ப்ரோவின் 12 ஜிபி ரேம், ஹெவி-டூட்டி போட்டோ-எடிட்டிங் அல்லது 3 டி கேமிங் போன்ற நவீன ஸ்மார்ட்போன் பணிகளைக் கையாள போதுமானதாக உள்ளது. ரெனோ 7 சீரிஸ் ஆனது ஓப்போ-வின் புதிய கலர்ஓஎஸ் 12 உடன் வருகிறது.

Source: Press Release