குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

நாட்டின் குடியரசு தினவிழா புதுடெல்லியில் கடந்த ஜன. 26-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அன்று நடைபெற்ற அணிவகுப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பி.ஏ. படிக்கும் மாணவர் நவீன்சங்கர், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பங்கேற்றார். இதேபோல் பி.காம் சி.எஸ். மாணவி நேகா, பி.காம். ஏ அண்டு எஃப் மாணவி ஸ்மிர்தி ஆகியோரும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

இவர்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்து, மாணவ-மாணவிகளுக்குக் கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும், கடந்த 7 வருடங்களாக இக்கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழா அணிவகுப்பில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருவதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பி.காம். ஏ அண்டு எஃப் துறைத்தலைவர் அகிலா, பி.காம். சி.எஸ். துறைத்தலைவர் சந்தானகிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, தீபக்குமார், கீர்த்திவாசன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.