கோவையில் முதல் கார் கேர் அவுட்லெட்: ‘தி டீடெய்லிங் மாஃபியா’ துவக்கம்

ஆட்டோமோட்டிவ் டீடெய்லிங் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான ‘தி டீடெய்லிங் மாஃபியா’ கோவையில் முதன்முதலாக கார் கேர் அவுட்லெடை லக்ஷ்மி மில்ஸ்  சந்திப்பில் தொடங்கியுள்ளது.

34 வருட அனுபவத்தோடு உயர்தர சேவைகளை வழங்கும் 85 ஸ்டோர்களை இந்தியாவில் இந்நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த சேவை மையத்தை இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

மேலும் இது குறித்த பத்திரிக்கை செய்தியில், டீடெய்லிங்  மாஃபியாவின் விரிவான போர்ட்ஃபோலியோ ஆயிரக்கணக்கான இந்தியர்களை கார்களை தூய்மைப்படுத்தல் மற்றும் டீடைலிங் சேவைகளின் மூலம் சென்றடைகிறது.

உலகம் முழுவதும் உள்ள சிறந்த நிறுவனங்களின் உயர்தர கார் பராமரிப்பு தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்ப அனுபவத்தை கலப்பதன் மூலம், சிறந்த பாதுகாப்பையும் அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வாகன சந்தைக்கு சர்வதேச கார்டீடெய்லிங் தயாரிப்புகளை இறக்குமதி செய்கிறோம். Labocosmetica மற்றும் Clarity Coat போன்ற தயாரிப்புகள் டீடெய்லிங்கில் மிக உயர்ந்த தரத்தை வழங்க உதவுகின்றன.

செராமிக் கோட்டிங், டெண்டிங் பெயிண்டிங், பெயிண்ட் ப்ரொடெக்ஷன் ஃபிலிம், பீல் செய்யக்கூடிய பெயிண்ட் மற்றும் பல சேவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூசிகள் இல்லாத பகுதி, சரியான வெளிச்சதை வழங்கும் விளக்குகள், பெயிண்ட் பூத், வாஷ் பூத், சர்வீஸ் சேவைகளுக்கான தனி பிரிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்ட டீடெய்லிங் ஸ்டுடியோக்கள் ஆகியவற்றை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.