78 சதம் இந்தியர்களின் நிதி திட்டமிடலில் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது – எஸ்பிஐ

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தி ஃபைனான்சியல் இம்யூனிட்டி சர்வே 2.0 என்ற விரிவான நுகர்வோர் ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த சர்வேக்காக நீல்சன் ஐக்யூ நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதையும் அடக்கும் வகையில் 28 நகரங்களில் வசிக்கும் 5 ஆயிரம் பேரிடம் தகவல்களை திரட்டியது.

பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாகளில் பெரும்பான்மையினர் நாட்டில் 3-வது அலை பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர். 80 சதம் சதவீதம் இந்தியர்கள் ஒற்றை அல்லது இரட்டை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ரீதியாக நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று உறுதியாக உணர்வதன் வாயிலாக இந்த சூழ்நிலையை கடந்து விட முடியும் என அவர்கள் நம்புவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் 38 சதம் இந்தியர்கள் அடுத்த 3 மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என்று உணர்கின்றனர்

பெருந்தொற்று காரணமாக வருமானத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக மேற்கூறிய கவலைகளை குறித்த நுகர்வோரின் நடத்தைகளை மறுவரையறை செய்வது தொடர்பாக இந்த சர்வே மேலும் முயற்சி மேற்கொண்டது. அதில் 79 சதம் பேர் வருமான சரிவை எதிர் கொண்டனர் அதில் 3-ல் 1 பங்கினர் குறைக்கப்பட்ட வருவாயை எதிர்கொள்ள நேர்ந்தது தெரியவந்தது. 64 சதம் இந்தியர்கள் வாழ்வின் முக்கியமான கட்டங்களாக கருதும் சேர்த்து வைத்த சேமிப்பு, ஓய்வு கால பயணம், குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தியதாக உணர்கின்றனர்.

கோவிட் 19 மற்றும் நிலையற்ற சூழல் காரணமாக செலவுகளை சமாளிப்பது மிகவும் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. மேலும் 57 சதம் இந்தியர்கள் தங்களது மற்றும் தங்களது குடும்பத்தினரின் நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கையாள முடிவதாக நினைப்பதும் இதனோடு தொடர்புடையதாக கருதுகின்றனர்.

ஒட்டுமொத்த நிதி திட்டமிட்டலில் காப்பீடு என்பது மிகவும் அதி அத்தியாவசியமானது என 78 சதம் இந்தியர்கள் உணர்கின்றனர். இவ்வாறாக காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 46 சதம் பேர் சுகாதார காப்பீட்டையும், 44 சதம் பேர் ஆயுள் காப்பீட்டையும் கோவிட் 19-க்கு பிறகு முதன்முறையாக வாங்கியுள்ளனர். காப்பீடு மிகவும் முக்கியமானது என இந்தியர்கள் உணர்ந்த போதிலும் ஆண்டு வருமானத்தை விட 3.8 மடங்கு மட்டுமே காப்பீட்டுக்காக ஒதுக்கியுள்ளனர், பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட 10 மடங்கு முதல் 25 மடங்கு வரையிலான நிலையை அவர்கள் நெருங்கக் கூட இல்லை.

இந்த சர்வே தொடங்கியது குறித்து எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 2 ஆவது மண்டல தலைவர் சிவ ராம கிருஷ்ணா கூறுகையில், “பெருந்தொற்று நமது வாழ்வில் பல்வேறு வழிகளிலும் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சவால்களை எதிர்கொள்தல் மற்றும் அதை கையாள்தல் போன்ற பல்வேறு காரணிகள் நுகர்வோர் மத்தியில் புதிய பழக்கங்கள் உருவாக வழிவகுத்தன” என்றார்.

 

Source: Press Release