கே.ஐ.டி கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

கே.ஐ.டி – கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டுதலின் படி பேராசிரியர்களைக் கொண்டு கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையின் சிறப்பு அம்சங்களைப் பற்றி கூறினார். உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் திருவிழா தான் பொங்கல் திருவிழா என்றும், இவ்விழாவில் போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் போன்ற பண்டிகைகள் எவ்வாறு விமரிச்சையாகக் கொண்டாடுவார்கள் என்று கூறினார்.

தைப்பொங்கல் என்பது விவசாயப் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் என்றும், இப்பண்டிகையின் போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ் போன்ற வீரவிளையாட்டுகள் நடத்தி விவசாயத்திற்கு உதவிப்புரியும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

இதன் பொருட்டு கல்லூரிப் பேராசிரியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பூக்களைக் கொண்டு வண்ணக் கோலங்கள் வரைந்தும், நமது பாரம்பரியத்தைப் போற்றும் விதமாக வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய உடையணிந்தும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.