“எப்போ வருவாரோ” – ஆறாம் நாள் : போதேந்திராள் பற்றி சிறப்புரை

புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஆறாம் நாள் அமர்வில் ஜி.எஸ்.மணி கலந்து கொண்டு போதேந்திராள் பற்றி உரையாடினார்.

அதற்கு முன்னர் தன்னலமற்ற சேவை செய்கின்றவர்களை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கௌரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆறாம் நாள் நிகழ்வில் அவிநாசி ஈஸ்வரன் என்பவருக்கு “அருள் வளர்செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.