நேரு கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 20 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உள் தரக் கட்டுப்பாட்டு நிர்ணய குழு இயக்குநர் ஷானி வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் அனிருதன் தலைமை உரையாற்றினார். கல்லூரி வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் ரமேஷ் ராஜா வாழ்த்துரை வழங்கினார்.

ACE EDUTECH – ன் செயலர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனஞ்செயன், செயலர் மற்றும் கல்வி இணை இயக்குனர் சாம்ஜித் தனராஜா, செயலர்- ஆங்கில மொழி பயிற்சியாளர் முகமது யாசீன், செயலர் – பாதுகாப்பு தொழில்நுட்பம் கிருஷ்ணன்லால் ஆகியோர் நிகழ்வைப் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.