ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேட்டிங் இன்ஜியர்ஸ் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் பஞ்சாப், சண்டிகர் குழுமம் கல்லூரிகள் இணைந்து நடத்திய தேசிய அளவிலான இ – பைக் சேலஞ்சில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் மெகட்ரான்ஸ் எலக்ட்ரிக் பைக் குழு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருது மற்றும் பல்வேறு பிரிவு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.

ஐஎஸ்ஐஇ இந்தியா மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் இணைந்து திறன், புத்தாக்கம் மற்றும் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்த இரண்டாம் பருவ போட்டிகளை நடத்தினர். மாணவர்கள் தங்களின் மறுவடிவமைக்கப்பட்ட மற்றும் புதுமையான மின் பைக்குகளுடன் இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்றனர்.

இந்தப் போட்டியானது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தால் புதிதாக வரையறுக்கப்பட்ட டிரைவ் ட்ரெயின் மற்றும் பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

23 உறுப்பினர்களை கொண்ட மெகட்ரான் குழுவில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர் விக்னேஷ்ராஜ் கேப்டனாகவும், மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர் கபிலன் துணை கேப்டனாகவும் பல்வேறு பிரிவு போட்டிகளில் ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளையும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பைகளையும் பெற்றுள்ளனர்.

கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், வழிநடத்தின உதவிப் பேராசிரியர் வீரகுமாரையும், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணஸ்வாமி, கல்லூரி முதல்வர் பால்ராஜ் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.