“கொரோனா மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல”

கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ் நாடு முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. கொரோனா போன்று இன்னும் நிறைய பெருத்தொற்றுகள் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே அதனை சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக இருக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி, இதில் நாம் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.