கோவை ஜெம் மருத்துவமனையில் குடலிறக்க வெள்ளிவிழா கண்காட்சி மே 13-ம் தேதி முதல் மே 20- ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளிவிழா கண்காட்சியை காவல்துறை ஆணையர் பெரியய்யா தொடங்கி வைக்க டாக்டர் பழனிவேலு வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கண்காட்சியில் பங்கு கொண்ட பொதுமக்கள் ஹெர்நியா பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விளக்கப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதற்கு வரும் ஹெர்னியா நோயாளிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சலுகை மருத்துவ (லேப்ரோஸ்கோப்பி) அறுவை சிகிச்சை செய்யப்படும். போது மக்கள் இதில் பங்கேற்று பயணடையுமாறு ஜெம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.