ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட்டது ஜெம் நிறுவனம்

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மதிய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, அத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால் சென்னையிலுள்ள தேசிய தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் சமர்பித்த மனு ஏற்கப்பட்டதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்குமாறு ஜெம் நிறுவனம், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும், விஷால் தனது டுவிட்டரில் பக்கத்தில், “நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஜெம் லேப்ஸ் நிறுவனம் கைவிட உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறுத்த போராடிய எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.