கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கார்டியாக் இமேஜிங்கோர்ஸ் பயிற்சிவகுப்பு

 கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், முதல் முறையாக மருத்துவர்கள், பணியாளர்களுக்கான ‘கார்டியாக்இமேஜிங்கோர்ஸ் – 2018’ இரண்டு நாள் பயிற்சி முகாம்  முதல் முறையாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

எந்த ஒரு மருத்துவ சிகிச்சைக்கும், பாதிப்புக்கு உள்ளான பகுதியை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்க வேண்டும். இதில், இருதய நோயை கண்டறியும் பரிசோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருதயத்தின் துடிப்பை வரைபடமாக தரும் இசிஜி முதல் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை கண்டறியும் சிடி ஸ்கேன் வரை அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிடி ஸ்கேன் இயந்திரத்தில் எடுக்கப்படும் படங்கள் ’இமேஜிங்’ என்ற முறையிலானவை.

இந்த (இமேஜிங்) படங்களை எடுக்க கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பமும், துல்லியமாக படம் பிடித்துக்காட்டும் உலகிலேயே சிறந்த தொழில்நுட்பம் கொண்ட சீமன்ஸ் சிடி ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளன. தென்னி்ந்திய அளவில் முதல் முறையாக இந்த இயந்திரம், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.உலகில் உள்ள சிறந்த இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களை பார்வையிட்ட பின்னர், இவற்றை கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமிஅவர்கள்இங்கு நிறுவியுள்ளார்.

இயந்திரங்களை மட்டுமல்ல, அவற்றை இயக்கும் தொழில்நுட்பத்தை மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் அறிந்திருந்தால் மட்டுமே இவற்றை திறம்பட பயன்படுத்த முடியும். இதற்கான கல்வியும் பயிற்சியும் மிக அவசியமாகிறது.
இத்தகைய பயிற்சியையும், கல்வியையும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பயன்பெறும் வகையில் இரண்டு நாள் பயிற்சி முகாம் ‘கார்டியாக்இமேஜிங்கோர்ஸ் – 2018’என்றபெயரில்முதல் முறையாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 250க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று பலனடைந்தனர்.

இமேஜிங் குறித்த இந்த கல்வியை சர்வதேச அளவிலிருந்து பல நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டனர். டாக்டர் நினா மேயர்ஷன், டாக்டர் மைக்கேல் லு, டாக்டர் பிரையன் கோஷஜ்ரா மற்றும்  அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள  மசூசட் பொது மருத்துவமனையிலிருந்து டாக்டர் சந்தீப் ெஹட்கிரே ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.

இந்தியாவில் உள்ளபிரபல நிபுணர்களான,டாக்டர் ரோசிட்டா வெங்கட்ராமன், டாக்டர் விமல்ராஜ், டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் டாக்டர் அஷிடா பர்துார் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமிஅவர்கள் இந்த கருத்தரங்கு குறித்து கூறுகையில், ‘‘ ஒரு சிகிச்சையை வெற்றிகரமக மேற்கொள்ள வேண்டுமானால், மருத்துவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த, துல்லியமான கருவிகள் அவசியம். இவற்றை மிகவும் சரியாக இயக்கும் தொழில்நுட்ப நிபுணர்கள், பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அதிநவீன பிலிப்ஸ் இன்ஜினியா எம்ஆர்ஐ ஸ்கேனர் மற்றும் சீமென்ஸ் ஸ்கேன் கருவிகள் உள்ளன. அதிநவீன கருவிகள், பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களாகல் நோயாளிகள் எவ்வித பயமின்றி, வலியின்றி அமைதியான முறையில் நிம்மதியான சிகிச்சையை பெற முடியும்.

அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து, கோவை மெடிக்கல் சென்டர் வழக்கமான பயிற்சிகள், கல்வி போன்றவைகளை நடத்தி அறிவுசார் திறனை மேம்படுத்தி வருகிறது, ’’ என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருதய படமெடுத்தல் பிரிவில், குறைந்த கதிர் வீச்சில் அதிகவேக ரத்த நாள சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் உள்ளன. இவை இதயத்தின் துடிப்பின் அளவை குறைக்காமலே நொடியில்இதயத்தைபற்றியதகவலைதரும். அதிநவீன கார்டியாக் எம்ஆர்ஐ  ஆய்வுகள், இருதயஅழுத்தத்தால்ஏற்படும் இருதய தசை வலியையும் அறிய உதவும். இத்தகைய படத்தொகுப்பு தொழில்நுட்ப கல்வியை ஏற்படுத்த உறுதுணையாக இருந்த டாக்டர் ஏ புதியவன், டாக்டர் ராஜேஷ்குமார், டாக்டர் ஜி கண்ணன் ஆகியோரை, மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமிஅவர்கள் பாராட்டினார்.