கோவையில் நேரு கல்லூரி சார்பில்  ஹெலி கார்னிவல்

 கோவையில் ஜெஸ்பிளை ஏவியேசன் சார்பில் ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவைஹெலிகாப்டர் சுற்றுலா சேவை மற்றும்         ஹெலி கார்னிவல் துவக்கம். தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் இதன் செயல்பாடுகள் துவக்கப்படுகின்றன. இதற்கான துவக்க விழா துவக்க விழா நிகழ்ச்சி இன்று (06.05.2018) வட்டமலையாம்பாளையம், கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

இதற்கு கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக இயக்குனரும் செயலாளருமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிகரன் தலைமை தாங்கினார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, கோயம்புத்தூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு முதல் ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கிவைத்தனர். இதன் ஒரு பகுதியான கோவை நேரு கல்வி குழுமம் மற்றும் ஜெஸ்பிளை நிறுவனம் சார்பில் கோவையில் ஹெலி கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து கோவை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது. தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இக்குழுமம் கல்வி நிறுவனங்களை அமைத்து, 50 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நேரு கல்வி குழுமத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 20 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சாதாரண மனிதனையும் சாதனையாளனாக மாற்றும் கல்வி பணியாற்றும் நேரு கல்வி குழுமம். மாணவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும், வானில் சிறகை விரித்து பறப்பதற்கு ஆசைப்படுவார்கள். அதற்கு பொருளாதாரம் ஒரு பெரும் தடையாக இருக்கும். இவர்களின் கனவை நனவாக்கும் விதமாகவும் டாக்டர்.ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கனவு குழந்தைகளின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் கோவையில் ஹெலி கார்னிவல் நிகழ்ச்சியாக ஹெலிகாப்டர் ரைடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 வயது முதல் உள்ள குழந்தைகள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் பறந்து கோவையை சுற்றி வலம் வரலாம்.

 

இந்த ஹெலி கார்னிவெல் நிகழ்ச்சியானது மே மாதம் 10 – ம் தேதி முதல் 15 – ம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். ஒவ்வொரு பயணமும் 10 நிமிடம் நடைபெறும். இதில் நமது கோவையை ஏரியல் வியூவில்கண்டு ரசிக்க முடியும். ஹெலிகாப்டரில் பறக்கும் போது பயணிகளின் வீட்டின் மேல் பறந்து செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும். 10 நிமிடத்தில் கோவையின் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள், கோவை மாநகரத்தின் அழகையும் கண்டு களிக்கலாம். 

இந்த ஹெலி கார்னிவல் நிகழ்ச்சிக்கு கட்டண சலுகையும் வழங்கப்படும் மேலும் 11வகுப்பு மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கு 5௦௦ ரூபாயும் 1௦ வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5% சலுகையும் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

பொள்ளாச்சி ஜெஸ்பிளை ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.ராஜேஷ் கூறும் போது :- கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஹெலிகாப்டர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் கலந்து கொண்டு பயணித்தார்கள். இதைத் தொடர்ந்து கோவை மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த 5 நாள் நிகழ்ச்சி 10 – ம் தேதி முதல் 15 – ம் தேதி வரை கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் சுமார் 1200 முதல் 1500 பேர் வரை பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மிகக் குறைந்த கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 3,999.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு அனுமதியுடன் கோவையில் இருந்து ஊட்டி சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சோதனை முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. கோவையில் இருந்து ஊட்டி சென்று வர 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தல் அவசியம் ஆகும். 

மேலும் எங்கள் ஜெஸ்பிளை ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் சார்பில் விழாக்களுக்கு வானிலிருந்து பூ தூவுதல், திருமண விழாக்கழுக்கு போட்டோ எடுத்தல், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான வணிக பயணங்கள், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சுற்றுலா அழைத்துச் செல்லுதல் உட்பட பல சேவைகளை வழங்கவுள்ளது. 

நம்ம கோவை சுற்றுலா முன்பதிவிற்கு கோவை நேரு கல்லூரி, எம்பரர் டிராவலைன் மற்றும் எங்களது இணைய தளமான www.jusfly.com மற்றும் 0422 4500600, 96009 77711 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவை நேரு கல்வி குழுமத்தினரும் ஜெஸ்பிளை ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினரும் செய்து வருகின்றார்கள்.