கோவையில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் துவக்கம்

கோவையில் நடைபெற்ற 10 வது தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு அசத்தினர்.

அசோசியேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா, ஹிந்துஸ்தான் ஸ்கௌட்ஸ் அண்ட் கைட் அசோசியேஷன் மற்றும் மை கராத்தே இண்டர்நேஷனல் இணைந்து 10 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்சிப் போட்டிகள் கோவையில் துவங்கியது.

கோவை கணபதி கிருஷ்ணா கவுண்டர் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஹிந்துஸ்தான் ஸ்கௌட்ஸ் அண்ட் கைட் அசோசியேஷன் கவுன்சில் தலைவர் ஹரிபிரசாத் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

கவுரவ விருந்தினர்களாக ராமநாதன், முன்னாள் வடக்கு மண்டல தலைவர் ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அசோசியேஷன் ஆப் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியாவின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இதில், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பிளாக் பெல்ட் பெற்றவர்கள், பெறாதவர்களுக்கும் தனித்தனி போட்டிகள், உலக கராத்தே சம்மேளன விதிமுறைப்படி நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோர், சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

துவக்க விழாவில் ஆந்திராவை சேர்ந்த பாஸ்கர், கர்நாடாகாவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்தோஷ்குமார் என தேசிய அளவிலான கராத்தே அசோசியேஷன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.