டாக்டர்.ஆர். வி. கல்லூரியில் இலவச கண் பரிசோதனை

டாக்டர். ஆர். வி. கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இரண்டு நாட்கள் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர். ஜான்சி மருத்துவக்குழு தலைமையில் கண் பரிசோதனை நடைபெற்றது.

இப்பரிசோதனையில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் கணிதவியல் துறைத்தலைவருமான உமாபிரியா செய்திருந்தார்.