ரத்தினம் கல்லூரியில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிப்பு

ரத்தினம் கல்லூரியில் சன்ஸ்டோன் மற்றும் ரத்தினம் கல்விக் குழுமம் இணைந்து தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தை அனுசரித்தனர்.

இந்த நிகழ்விற்கு ரத்தினம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம் மற்றும் முதல்வர் முரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரத்தினம் கல்விக் குழுமங்களில் உள்ள சன்ஸ்டோன் முதுநிலை வணிக நிர்வாக மேலாளர் கிருத்திகா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நடனம், ஆங்கிலம், மற்றும் தமிழ் கவிதை எழுதுதல் மற்றும் குறும்படங்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

மாசுக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்களின் குறும்படங்கள் மூலம் எடுத்துரைத்தனர்.