சூலூர் கே.எம்.சி.ஹெச்  மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம்

உலக கை சுகாதார  தினத்தை முன்னிட்டு சூலூர் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இந்த முகாமை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, சூலூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, சூலூர் பேரூராட்சி  செயல் அலுவலர் தனசேகர் மற்றும் சூலூர் சுகாதார ஆய்வாளர்  கண்ணன் ஆகியோர்  தொடங்கிவைத்தனர்.

நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரை காப்பது போன்றதாகும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி உலக கை சுகாதார தினமாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு “உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள்” எனும் உலகளாவிய முயற்சியை துவங்கியுள்ளது.

இன்றைய உலகில் நோய்த்தொற்றை தடுப்பதும், பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படக்கூடிய சுமைகளை தடுப்பதும்  நெருக்கடியான ஒன்றாகும். எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அமைப்பை பாதுகாப்பானதாக இருக்க செய்ய வேண்டும்.

இதன் அங்கமாக கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் கை கழுவும் சோப்பு  கரைசல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு கை கழுவ வேண்டும் என்பதை பற்றியும், கை கழுவுதலின் அவசியம் குறித்து கூறும் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. எளிதில் அகற்றக்கூடிய  டிஸ்யூ பேப்பர் கை கழுவும் அணைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கை கழுவும் இடங்களும் நோய் தொற்றும் கிருமிகளிடமிருந்து   பாதுகாக்கப்படுகிறது.

சுகாதார ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றை தடுப்பதே இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இது குறித்து கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மேலும் சுகாதார ஊழியர்களை தொடர்ந்து கண்காணித்தும் தணிக்கை செய்தும், அவர்களுக்கு பரிசு அளித்தும் ஊக்குவிகின்றது.