கோவையில் ஏசியன் பெயிண்ட்ஸின் ‘தி பியூட்டி ஃபுல் ஹோம்ஸ்’ தொடக்கம்

வீட்டு அலங்கார பொருட்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தி பியூட்டிஃபுல் ஹோம்ஸ் எனும் நவீன மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நவீன கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் வீடுகளை அலங்காரம் செய்ய நவீனத்துவம் வாய்ந்த பல்வேறு வசதிகள் கொண்ட புதிய மையமாக ஏசியன் பெயிண்ட் நிறுவனம் நாடு முழுவதும் தி பியூட்டிஃபுல் ஹோம்ஸ் எனும் மையத்தை தொடங்கி வருகின்றன.

அதன் படி கோவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கோவை சுக்கரவார் பேட்டை மில் ரோடு பகுதியில் உள்ள ஆனந்தா கார்ப்பரேஷன் வளாகத்தில், தி பியூட்டிஃபுல் ஹோம்ஸ் மையத்தை தொடங்கியுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி , அமித் சிங்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் ஆனந்தா கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் நித்தின் இம்மானுவேல் மற்றும் சாந்தி இம்மானுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி பியூட்டிஃபுல் ஹோம்ஸ் இல் வீட்டு அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டை அழகுப்படுத்தத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பலவகையான ஃபர்னிச்சர்கள் ஒரு தளம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு நேரடியான மற்றும் டிஜிட்டல் ரீதியான அனுபவங்கள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டை அலங்கரிக்கத் தேவையானப் பொருட்களை வாங்குவது குறித்து விரைவாகவும் திறம்படவும் தீர்மானிக்க ஏதுவாக இந்த மையம் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.