கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் சுற்றுப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாகச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பை குறைத்துள்ளோம், ஒமைக்ரான் என்ற வைரஸ் புதிதாக வந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் இன்னும் கண்டறியப்படவில்லை. கோவை விமான நிலையத்தில் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதோடு பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் பயணிகள் வெளியே அனுப்பபடுகிறார்கள்.

மாஸ்க் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபாரதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். தினமும் 9 ஆயிரம் கொரோனா டெஸ்ட் எடுத்து வருகிறோம் என்றும் கோவை மாவட்ட எல்லையான வாளையார் பகுதியில் மீண்டும் முகாம் அமைத்து கண்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.