உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : 300 பேருக்கு உணவு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாய்பாபா காலனி பகுதியில் திமுக கழகத்திற்கு உட்பட்ட 11வது வட்ட கழகத்தில் சுமார் 300 நபர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர் கிருஷ்ணன் ஆலோசனையின் படி சாய்பாபா காலனி பகுதி கழக பொறுப்பாளர் கே.எம்.ரவியின் முன்னிலையில் 11 வது வட்ட கழக செயலாளர் கண்ணனின் தலைமையில் மற்றும் இளைஞர் அணியை சார்ந்த வதம்பை ஸ்ரீனி, கோவை நவாப் அவர்களுடன் இணைந்து உணவு வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நந்தகுமார்,  சுக்குருள் பாபு மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.