தேசிய அளவிலான கராத்தேவில் வேலம்மாள் பள்ளி மாணவி இரண்டாமிடம்

முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி நித்யா,
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ- ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2 வது ஷூரி – டோ கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, 15-வயதிற்குட்பட்டோருக்-கான “நுஞ்சாக்கு கட்டா” என்னும் கராத்தே பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

தேசிய அளவிலான கராத்தே மற்றும் கோபுடோ போட்டியில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி
“நுஞ்சாகு கட்டா ” கராத்தே பிரிவில் சிறந்து விளங்கினார். நுஞ்சாகு கட்டா என்பது தற்காப்புக் கலையாகும், இதில் இரண்டு குச்சிகள் அதன் முடிவில் குறுகிய சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியை ஒகினாவா ஷுரி -டோ கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேஷன் ஆஃப் இந்தியா இணைந்து நடத்தியது, இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.